இண்டிகோ விமான பைலட்டான ஆட்டோ டிரைவர்!
மும்பை: ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்த ஒரு இளைஞர், தனது கடின
உழைப்பால், இன்டிகோ விமானத்தின் பைலட்டாக பணியாற்றி வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் பன்டவானேவின் தந்தை தனியார்
நிறுவன செக்யூரிட்டி கார்ட். ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்ததால்
ஸ்ரீகாந்த் 12ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை
காரணமாக, ஆட்டோ ஓட்டி வருவாய் ஓட்டத் தொடங்கினார் ஸ்ரீகாந்த்.
ஆனால், அவரது வாழ்க்கையில், ஒரு தருணம் பெரும் திருப்பு முனையை தந்தது.
ஆகாயத்தில் பறக்க வைக்கப்போகும் அற்புத தருணம் என்று அன்று
ஸ்ரீகாந்த்துக்கு தெரிந்திருக்கவில்லை. கஸ்டமரை பிக்அப் செய்ய போன
இடத்தில், ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் தனது பழைய நண்பர் ஒருவரை
ஸ்ரீகாந்த் சந்திக்க நேரிட்டது.
Read more at: http://tamil.oneindia.com/news/india/an-auto-driver-who-became-an-indigo-commercial-pilot-228826.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/an-auto-driver-who-became-an-indigo-commercial-pilot-228826.html
பளிச்சென்ற வெள்ளை நிற ஆடையில், தொப்பியுடன், தனது நண்பன் கம்பீரமாக
நிற்பதையும், கிரீஸ் கறையுடன் கூடிய காக்கி சட்டையுடன் தான் இருப்பதையும்
பார்த்த ஸ்ரீகாந்த் ஒரு நிமிடம் கூனிக்குறுகி போனார். ஆனால், அவரது நண்பரோ,
இந்த ஏற்றத்தாழ்வை பெரிதாக எடுக்கவில்லை. தாழ்வை நீக்கி ஏற்றம் பெறுவது
எப்படி என்று ஸ்ரீகாந்த்துக்கு ஐடியா கொடுத்தார்.
"நீ 12வது முடித்திருந்தாலும் பரவாயில்லை, பைலட் ஆகலாம்" என்று அவர் கூறிய
வார்த்தைகள் அப்புறம் ஸ்ரீகாந்த்துக்கு வேதவாக்காக மாறியது. டிஜிசிஏ பைலட்
ஸ்காலர்ஷிப் பற்றிய விவரத்தை நண்பரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட
ஸ்ரீகாந்த் முழு மூச்சாக பைலட் ஆக வேண்டும் என்ற கனவோடு உழைத்தார். மத்திய
பிரதேசத்திலுள்ள பைலட் பள்ளியில் படித்தார். வெற்றியும் பெற்றார்.
படிக்கும் காலத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது பெரும் சவாலாக இருந்தது.
ஆனால், சவாலை சமாளித்து தடைக்கல்லை தாண்டினார் ஸ்ரீகாந்த்.
ஆனால், ஸ்ரீகாந்த்தின் போதாத நேரம், அப்போது விமான துறை சற்று சரிவை
சந்தித்தது. எனவே புதிய பைலட்டுகளை பணியமர்த்த பல நிறுவனங்கள் தயங்கின.
ஆனால், குடும்ப சூழ்நிலையோ ஸ்ரீகாந்த்தை நெருக்கியது. வேறுவழியில்லை,
என்பதை தெரிந்து கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில்
வேலைக்கு சேர்ந்தார் ஸ்ரீகாந்த்.
ஆனால், அதிருஷ்ட காற்று ஸ்ரீகாந்த் பக்கம் வீசியது. 2 மாதங்களிலேயே இண்டிகோ
விமான நிறுவனத்திடமிருந்து ஸ்ரீகாந்த்துக்கு அழைப்பு வந்தது. அதுவும்,
பைலட் பதவி அளிப்பதாக. அன்று ஆட்டோ ஓட்டிய அதே ஸ்ரீகாந்த் இன்று உயர, உயர
பறக்கிறார். அவரது கனவுகளுடன் சேர்ந்து.
0 comments:
Post a Comment