HI THIS IS MY BLOG

THIS IS MY BLOG

HI THIS IS MY BLOG

Tuesday, 16 June 2015

அலகாபாத் அருகே இந்திய விமானப்படை விமானம் விபத்து: விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

லக்னோ: அலகாபாத் அருகே இந்திய விமானப்படை போர்விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ADVERTISEMENT இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக போர் விமானம் இன்று காலை 7.25 மணிக்கு வழக்கமான பயிற்சி பணியில் ஈடுபட்டது. காலை 8.47 மணிக்கு விமானம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகர் அருகே செல்கையில் விபத்துக்குள்ளானது.

Indian Air Force's Jaguar fighter aircraft crashes near Allahabad
விமானம் தரையில் விழப்போவதை உணர்ந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் எதனால் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது என்பது உடனே தெரியவில்லை.
Indian Air Force's Jaguar fighter aircraft crashes near Allahabad
இந்த ஆண்டில் விபத்துக்குள்ளான இரண்டாவது ஜாக்குவார் போர் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா அருகே ஜாக்குவார் போர்விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விமானப்படை விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • Why are man and dog best friends? It’s a hormone rush Dogs that had received the hormone boost stared for longer at … Read More
  • One dead as police fire at protesters in Jammu and Kashmir's Narbal SRINAGAR/NEW DELHI: One person was killed on Saturday in police firing at the … Read More
  • A Chinese Grand Prix podium hostess who had champagne sprayed in her face by race winner Hamilton has played down the incident after the… Read More
  • Stars light up Chennai … Read More
  • She’s back With Kanchana-2, Taapsee Pannu says she has come a long way in Tamil films Aadukalam brought Taapsee Pannu to the notice… Read More

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.