HI THIS IS MY BLOG

THIS IS MY BLOG

HI THIS IS MY BLOG

Thursday, 8 October 2015

“சமரசம் கிடையாது. தேர்தல் நடந்தே தீரும்..” – பாண்டவர் அணி திட்டவட்ட அறிவிப்பு..

“வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டிகள் வேண்டாம். பிரச்சினைகளை சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைக்கப் போகிறோம்..” என்று தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகியவை இன்று காலையில் அறிவித்தன.
கையோடு வரும் 10-ம் தேதி இரு அணிகளையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பும் விடுத்திருந்தது.
ஆனால் இந்த அழைப்பை நாசர் தலைமையிலான பாண்டவர் அணி முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து அந்த அணியினர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
வணக்கம்.
வருகிற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து , மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.
வாக்குப் பதிவிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய  கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைப் படித்து விஷயத்தை நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால் இந்த தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்த பயத்திற்கு சில விளக்கங்களை அளிப்பதை எங்களது கடமையாக நினைக்கிறோம்.
தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என்று குறைந்தபட்சம் 27 சங்கங்கள் தமிழ் சினிமாவுலகில் இருக்கின்றன. அனைத்து சங்கங்களுக்கும் 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்றுவரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள்  போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்துகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்கூட கடந்த முறை தேர்தல் நடந்தபோது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி, அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்..! ஒற்றுமையாகவும் இருக்குறீர்கள்…!
இப்படி , உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது …?
நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில், பாண்டவர் அணியால்  மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்தக் கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால்,  நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்ப்போம்.
இந்த்த் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசிவரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்ப்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம்.
இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.
இப்படிக்கு
பாண்டவர் அணி

Related Posts:

  • This is CSK Fire.........,,,,,,,,,,,@@@@@@@@@!!!!!!!!!!!!!! http://www.iplt20.com/videos/media/id/4179809181001/m12-mi-vs-csk-match-highlights … Read More
  • ASP .NET Web Sites ASP.NET is great for building standards-based websites with HTML5, CSS3, and JavaScript. ASP.NET supports three approaches for m… Read More
  • Tiger Killed Men In ZOOOOOOOO.......,,!!!!! http://indiatoday.intoday.in/video/youth-killed-by-white-tiger-delhi-zoo-tiger-kills-youth/1/384530.html… Read More
  • APIs ASP.NET includes ASP.NET Web API for creating rich REST-ful Web Services that return JSON, XML, or any kind of content the web supports! ASP.… Read More
  • 14-year-old girl kidnapped, raped in Vizag for three days. In a shocking incident, a 14-year-old girl was kidnapped and raped for three… Read More

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.