ஈழத் தமிழர் பிரச்சினையில் திமுகவை கைவிட்டு விட்டது காங். - டி.கே.எஸ். இளங்கோவன் Posted by: Sudha Published: Thursday, March 7, 2013, 9:50 [IST] Ads by Google Road Safety G+ Hangout Post Your questions for Dr Joshi by March 22nd on the Ministry Website! www.MORTH.nic.in Introducing Tata VistaD90 Now get ready for a thrilling ride. Hatchback prices. Test drive now! Cars.TataMotors.com/Tata-Vista-D90 டெல்லி: ஈழத் தமிழர் பிரச்சினையில் எங்களை கைவிட்டு விட்டது, திக்கற்ற நிலையில் விட்டு விட்டது காங்கிரஸ் என்று குற்றம் சாட்டியுள்ளது திமுக. லோக்சபாவில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண ஜனாதிபதி உரை தவறி விட்டது. இதற்காக தமிழர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். உணர்ச்சிபூர்வமான இலங்கை தமிழர் பிரச்னையில், திமுக.வை காங்கிரஸ் திக்கற்ற நிலையில் கைவிட்டு விட்டது. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, பொருளாதார தடை விதிப்பது உட்பட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இலங்கைக்கு எதிராக இந்தியா எடுக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியின்போது பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, இலங்கை மீது நம்மால் ஏன் பொருளாதார தடை விதிக்க முடியாது என்றார். அப்போது குறுக்கிட்ட தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆரூண் ரஷீத், ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் அமைப்பு கொன்று குவித்துள்ளது என்றார். இதைக் கேட்டு கோபமடைந்த இளங்கோவன், தமிழர்களின் நலனில் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அக்கறை செலுத்தினர். அந்த பாரம்பரியத்தை நீங்கள் நீக்க விரும்புகிறார்களா? என்று ஆருணை பார்த்து கேட்டார். இதைக் கேட்டதும் அமைதியாகி விட்டார் ஆரூண். தொடர்ந்து பேசியஇளங்கோவன், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிப்பதற்கான 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை என்று இலங்கை அரசு கூறி வருகிறது. கடந்த 1987ல் இலங்கையுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் இந்த பிரிவை சேர்ப்பதற்கு முக்கிய காரணமாக ராஜீவ் காந்தி இருந்தார். இச்சட்டத்தை அமல்படுத்தவில்லை என்று இலங்கை அரசு இப்போது கூறும் நிலையில், ராஜீவ் காந்தியின் நல்ல நோக்கத்தின் கதி என்ன. கடந்த 3 ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைதியாகஇருந்து வருகிறது. மெளனம் சாதிக்கிறது. எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏன் இந்த நிலைப்பாடு என்பது புரியவிலலை. மிச்சமிருக்கும் தமிழரக்ளையும் காக்க இந்தியா நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங், மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள் என்று தொடர்ந்து இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தியபடிதான் உள்ளது. 13வது அரசியல் திருத்தத்தையும் நிறைவேற்றும்படியும் நாங்கள் கோரி வருகிறோம். இதை என்னை வந்து நேரில் சந்தித்த அதிபர் ராஜபக்சேவிடமும் நான் உறுதிபடத் தெரிவித்தேன் என்றார். இன்று நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment