Author: Unknown | 04:26 | No Comments |
நாகர்கோவில் வங்கியில் ரூ. 35 லட்சம் மோசடி செய்தவர் கைது
By
dn, நாகர்கோவில்
First Published : 16 April 2015 03:26 PM IST
நாகர்கோவில் வங்கியொன்றில் போலி
ஆவணங்கள் அளித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ள நபரை மாவட்டக் குற்றப் பிரிவு
போலீஸôர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர்
செல்வம் (52). இவர் மீது நாகர்கோவில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் முதுநிலை
மேலாளர் ரகுபதி கடந்த சில நாள்களுக்கு முன்னர் மாவட்ட எஸ்.பியிடம் புகார்
ஒன்றை அளித்தார். அதில் செல்வம் போலி ஆவணங்களை அளித்து ரூ. 35 லட்சம் மோசடி
செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன் இம்மனு மீது
விசாரணை நடத்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸôருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் செல்வம் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது
தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்து
அவர் மீது பணமோசடி வழக்குப் பதிந்தனர். பின்னர் அவர் நாகர்கோவில்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது மேலும் பல வங்கிகளில் மோசடி வழக்குகள் உள்ளது
விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வேறு ஏதேனும் வங்கிகளில் இவர்
போலி ஆவணங்களை அளித்து மோசடி செய்திருந்தால் புகார் தெரிவிக்கலாம் என
மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment