2 வயதில் திருமணம்..13 வயதில் விதவை: நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்
ராஜஸ்தானில் சிறுமி ஒருவருக்கு 2 வயதில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.
இந்நிலையில், அங்குள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12ம் திகதி பேருந்து உயரழுத்த மின்கம்பி விழுந்த கோர விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
அந்த விபத்தில் சோஹானி தேவியின் 15 வயது கணவன் சுக்கிராம் குஜ்ஜாரும் உயிரிழந்துள்ளார்.
அந்த சிறுமிக்கு 2 வயதாக இருந்த போது சுக்கிராமை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது சோஹானி தேவிக்கு 13 வயது ஆகிறது.
படிக்கவேண்டிய வயதில் அந்த சிறுமி விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமனார் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுமி தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருந்துள்ளார்.
இதுபற்றி குழந்தைகள் நல ஆர்வலரான ரவி சர்மா கூறுகையில், சோஹானி விவகாரம் மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால் இம்மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட பெண் குழந்தைகள், பால்ய விவாகங்களில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், அரசு இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment