THIS IS MY BLOG

Thursday, 8 October 2015

“கேள்வி கேட்க உனக்கென்னடா யோக்கியதை இருக்கு..?..” – விஷாலை வறுத்தெடுத்த சிம்பு..!

நேற்று மாலை தேனாம்பேட்டை ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடிகை ராதிகா, சிம்பு, பாக்யராஜ், மோகன்ராம், ஊர்வசி கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் சிம்பு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு ஆக்ரோஷமாகவும், கோபமாகவும் பேசித் தீர்த்துவிட்டார். நடிகர் விஷாலை ‘அவன்’, ‘இவன்’ , ‘வாடா’, ‘போடா’ என்று ஏக வசனத்தில் திட்டித் தீர்த்தார். இவருடைய பேச்சை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், ‘இவருக்கு ராதாரவியே பரவாயில்லை போலிருக்கே’ என்று வருத்தப்பட்டார்.
நடிகர் சிம்பு பேசியதிலிருந்து சில பகுதிகள் இங்கே :





“நடிகர் சங்கம் என்பது சுமார் 3500 உறுப்பினர்கள் உள்ள ஒரு அமைப்பு.. இங்க ஏதாவது பிரச்சினைன்னா நமக்குள்ள நாமளே பேசித் தீத்துக்கணும். இப்போ நான் துணைத் தலைவர் பதவிக்கு நிக்குறேன். எனக்கு போட்டியிடணும்னு ஆசையே இல்லை. மத்தவங்க சொன்னதுக்காகத்தான் நிக்குறேன். எனக்கு பதவி ஆசையும் இல்லை. போட்டியே இல்லாமல் இருக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்.
என் சக நடிகர்களே இப்போது என்னை விரோதியாக பார்க்கிறார்கள். என் குடும்பமே இப்போது பிரிந்துவிட்டது. இந்த நிலைமைக்கு யார் காரணம்..? நடிகர் சங்கத்தை அரசியல் ஆக்கியது யார்.? இதற்கான அவசியம் என்ன..? எங்களுக்கு எந்த அணியும் வேண்டாம். நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. வாபஸ் வாங்கிக்கிறோம். இது பயத்துக்காக இல்லை. சங்கத்துக்கு ஒற்றுமை முக்கியம்.
நாகரீகம் தெரியாத பண்பாடு இல்லாதவர்களிடம் நடிகர் சங்கத்தை கொண்டு போய் கொடுக்கலாமா..? இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்தலில் இதுபோல நடந்தது உண்டா..? நாளைக்கு படங்களில் நடிக்கும்போது அவர்களுடனேயே நான் நடிக்க வேண்டி வரும். அப்போ எப்படி அவர்களிடம் நான் பேசுவேன்.. பழகுவேன்..? என் குடும்பத்தில் இருந்து என்னை பிரித்துவிட்டனர்.
சரத்குமார் மீது உனக்கு ‘பர்சனலா’ பகை. அதற்காக நடிகர் சங்க ஒற்றுமையை உடைக்க முயற்சிக்கிற.. புதிய கட்டிடம் கட்டுவதற்காக, பழைய கட்டிடத்தை இடிக்கப் போவதா ஆறு மாதமா சொல்லிக் கொண்டிருந்தபோது, நீ எங்க போன..? அன்னைக்கே சங்கத்துக்கு வந்து கேள்வி கேட்டிருக்கலாம்ல..?
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டக்கூடாது என்று பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கவிடாமல் வைத்திருப்பது யார்..? அந்த வழக்கை வாபஸ் வாங்கியிருந்தால் இந்நேரம் கட்டிடமே கட்டியிருக்கலாமே..?  

இன்னிக்கு இவர் சொல்றாரு.. நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தியேட்டர் வரக் கூடாது. பக்கத்தில் பள்ளிக்கூடம் இருக்குன்னு.  அப்போ ‘பார்’ வரணும்னு நினைக்கிறியா..? அப்படியானால் நடிகர் சங்கம் என்ன ‘டாஸ்மாக்’கா?
நான் பிறந்த ஒன்பது மாசத்துல இருந்து சினிமாவுல நடிக்கிறவன்டா. எத்தனையோ வருஷமா நடிகர் சங்கத்துல கமிட்டி மெம்பரா இருக்கேன்.   எத்தனையோ நடிகர் சங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டு இருக்கேன்டா. நீ அதுக்கெல்லாம் ஒழுங்கா வந்தியா..?
கேள்வி கேட்க உனக்கு என்னடா  யோக்கியதை இருக்கு..? என் குடும்பத்துல ஏண்டா குழப்பம் உருவாக்கப் பாக்குற..? நம்ம குடும்பப் பிரச்னையை நீ ஏன்டா ஏழு கோடி மக்கள்கிட்ட கொண்டு போற..? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா..?  நீ பண்ணது எல்லாம் போதும். உன் உள்நோக்கம்தான் என்ன..? 
இப்படியெல்லாம் பேச எனக்கே கேவலமாத்தான் இருக்கு. அசிங்கமாத்தான் இருக்கு. என் மூஞ்சில நானே எச்சில் துப்பிக்கிற மாதிரிதான் இருக்கு. அவனோட சூழ்ச்சி வலையில்  நாசர், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், சந்தானம் போன்ற என்னுடைய நல்ல நண்பர்களும், அண்ணன்களும் சிக்கியிருக்காங்க. சந்தானம் எனக்கு போன் பண்ணி ‘இப்படியொரு கூட்டம் நடக்குது. போறேன்’னு சொன்னார். ‘சரி. போயிட்டு வாங்க’ண்ணு சொன்னேன். எனக்குப் போட்டியாளராக இருக்குற தனுஷ்கூட எனக்கு போன் செஞ்சு ‘என்ன இப்படி அசிங்கமா இருக்கு..? சங்கத்துல ஒற்றுமை இல்லையே’ன்னு பீல் செஞ்சாரு.. இப்படி நல்லாயிருந்த எங்க குடும்பத்தையே பிரிச்சுட்டியேடா..?
நடிகர்கள் கிரிக்கெட் போட்டி முதன்முதல்லா துவங்கியபோது அப்பாஸ்தான் கேப்டனா இருந்தார். அப்போ ஏதோ பிரச்சினை பண்ணி அப்பாஸை கேப்டன் பதவில இருந்து தூக்கிட்டு விஷால் கேப்டனா வந்தாரு. அதுக்குப் பின்னாடி நான் அந்த டீம்லயே இல்லை. அந்த கிரவுண்ட் பக்கமே போகலை. கிரிக்கெட் அணியின் கேப்டன்றதால ‘நான்தான் கேப்டன்’,, ‘நான்தான் கேப்டன்’னு சொல்லிக்கிறதா..? ‘கேப்டன்’னு சொல்றதால நீயும் விஜயகாந்தும் ஒண்ணா..? இதைச் சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு..?  
நடிகர் ராதாரவி ஒரு மூத்த கலைஞர்.. அவர் எல்லாரையும்தான் திட்டியிருக்காரு. என்னையும்தான் திட்டியிருக்காரு. அதையெல்லாம் ஒரு மூத்த கலைஞர் நம்ம வளர்ச்சிக்காக சொல்றாங்கன்னு எடுத்துக்கணும். ஆனா நீ அவரை ஏதோ ரோட்டுல போற ஆளுன்னு நினைச்சு பேசிட்ட. அதான் பிரச்சினையாயிருச்சு. அவர் ‘நாய்’ன்னு திட்டிட்டாருன்னு சொல்றாங்க. அது தப்புதான். ‘நரி’ன்னுதான் சொல்லியிருக்கணும். நீ நரி. உன்னைப் போய் நாயுன்னு சொல்லிட்டாரு பாரு. அதாச்சும் நன்றியுள்ளது..
உன் சொத்துன்னு சொல்லி அன்னிக்கு ஒரு கூட்டத்தைக் காண்பிச்ச.. இப்போ நான் காண்பிக்கிறேன். 11-ம் தேதி அதே ராகவேந்திரா மண்டபத்துல. அத்தனை கலைஞர்களுக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். நம்ம பிரச்சினையை நாமளே பேசித் தீர்த்துக்கலாம். 11-ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கும் கூட்டத்திற்கு எல்லாரும் வாங்க. அவனை விட்டுட்டு வந்திருங்க. நாமளே உக்காந்து பேசி அமைதியா தீர்த்துக்கலாம். நம்ம குடும்பம் நல்லாயிருக்கணும்னு நினைச்சீங்கன்னா எல்லாரும் அன்னிக்கு மறக்காமல் வந்திருங்க..” என்று சீறி முடித்தார்.
இப்படி எல்லாவற்றையும் பேசிவிட்டு கடைசியில் செம காமெடியாக, ‘நான் ஏதாவது தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுக்குங்க’ என்றும் சொல்லிவிட்டுத்தான் ஓய்ந்தார்..!
இன்னும் என்னென்ன காமெடியை பார்க்க வேண்டியிருக்கோ தெரியலை..!

“சமரசம் கிடையாது. தேர்தல் நடந்தே தீரும்..” – பாண்டவர் அணி திட்டவட்ட அறிவிப்பு..

“வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டிகள் வேண்டாம். பிரச்சினைகளை சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைக்கப் போகிறோம்..” என்று தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகியவை இன்று காலையில் அறிவித்தன.
கையோடு வரும் 10-ம் தேதி இரு அணிகளையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பும் விடுத்திருந்தது.
ஆனால் இந்த அழைப்பை நாசர் தலைமையிலான பாண்டவர் அணி முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து அந்த அணியினர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
வணக்கம்.
வருகிற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து , மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.
வாக்குப் பதிவிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய  கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைப் படித்து விஷயத்தை நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால் இந்த தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்த பயத்திற்கு சில விளக்கங்களை அளிப்பதை எங்களது கடமையாக நினைக்கிறோம்.
தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என்று குறைந்தபட்சம் 27 சங்கங்கள் தமிழ் சினிமாவுலகில் இருக்கின்றன. அனைத்து சங்கங்களுக்கும் 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்றுவரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள்  போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்துகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்கூட கடந்த முறை தேர்தல் நடந்தபோது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி, அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்..! ஒற்றுமையாகவும் இருக்குறீர்கள்…!
இப்படி , உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது …?
நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில், பாண்டவர் அணியால்  மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்தக் கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால்,  நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்ப்போம்.
இந்த்த் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசிவரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்ப்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம்.
இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.
இப்படிக்கு
பாண்டவர் அணி

மணிரத்னம் படத்திலிருந்து துல்கர் விலகலா?

மணிரத்னம் படங்கள், ஓ காதல் கண்மணி, துல்கர் சல்மான், நித்யா மேனன் படங்கள், கீர்த்தி சுரேஷ் படங்கள், கார்த்தி ஆதரவு, கார்த்தி படங்கள்


மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படம் இளைஞர்கள் மற்றும் காதலர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. எனவே மணிரத்னத்தின் அடுத்த படத்தை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அவரும் தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். 

இப்புதிய படத்தில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், கார்த்தி, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது என்றனர். ஆனால் தற்போது வந்துள்ள செய்திகள் அதில் சில மாறுதல்களை கொண்டுள்ளது. இதில் கார்த்தி மற்றும் நித்யாமேனன் நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளதாம். துல்கர், கீர்த்தி பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் நடித்த நானி இப்படத்தில் இணைய சம்மதித்து கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இவர் துல்கருக்கு பதிலாக நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 29 July 2015

Duck Tales: The Cricket Team that was all out for nought

Duck Tales: The Cricket Team that was all out for nought

May 8, 2015
1554
Duck Tales: The Cricket Team that was all out for nought

Throughout the years, there have been a few happenings in the beautiful game of cricket that have left the viewers flabbergasted. The best example is the unbelievable comeback of Rajshahi Divison against Chittagong Divisonfrom 77/6 to 675/9. Another one can be Sir Don Bradman's blitzkrieg - 100 runs in just 3 overs in a match between the two local Australian teams Blackheath and Lithgow. (Read moreHERE
Such instances don't get a mention till the time till the time they are being brought into frame by something or somebody. Just like the above two, there is one more surprising instance where a team got all out for zero while chasing a meagre target of 81, and it was a match that took place between two local cricket clubs in England (Glastonbury and Langport) in 1913. 
The game took place on Whit Monday (May 25). While batting first, Glastonbury were skittled out for 80 by HE Cozens and J Lang. While defending, C Baily and A Lisk ran through Langport's batting and took three and seven wickets respectively without conceding a run and as a result of this, Langport lost the match by 80 runs. A tale of 11 ducks! 
Langport's woeful efforts emerged 98 years later (in 2011) because Toby Strang, the club's archivist, decided that the side of 1913 ought to have some sort of recognition.
"The scorecard from the day has been in the clubhouse for years and we thought it was about time it was recognised by Wisden [Cricketers' Almanack] or Guinness World Records," he said.
"I started playing for the club in 1965 and there's never been anything like that since then. I think the lowest score was 18 but the conditions that day were appalling for batsmen.
"How can a team be out for zero? We don't know the weather or conditions that day but it beggars belief the team didn't even score an extra."
A local newspaper cutting from the day reported that the score "caused quite an amusing sensation" among the spectators.
Here is the scorecard of the match: 
Glastonbury: CAH Baily b Cozens 34; A Lisk c Knight b Lang 6; GJ Ingram run out 1; B Giblett hit wkt b Cozens 8; HS Baily not out 9; H Baily b Cozens 0; W Davis b Lang 10; A Lukins run out 4; G Edwards lbw b Cozens 0; J Pompey run out 4; T Wickham b Cozens 1; Extras 3, Total 80
Langport: C J Manley lbw b Lisk 0; FJ Pittard b Lisk 0; J Lang lbw b Lisk 0; A Knight c Lukins b Lisk 0; WE Brister b C Baily 0; HE Cozens b Lisk 0; HG Stigings lbw b Lisk 0; HB Hamm b C Baily 0; L Parker b C Baily 0; H Weaver not out 0; F Burningham b Lisk 0; Total 0

அப்துல் கலாம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த்!

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலை பார்த்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தற்போது அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள்,பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தே.மு.தி. க தலைவர் விஜயகாந்த் மாலை 4.20 மணியளவில் அப்துல்கலமின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் உடன் இருந்தனர். அப்துல் கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைக்கும் போது விஜயகாந்த் துக்கம் தாளாமல் அழுதார். அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதாவும் அழுதார். இருவரையும் சுற்றியிருந்தவர்கள் தேற்றினர்.

Friday, 26 June 2015

ICC rankings for Tests, ODIs and Twenty20


ICC Test Championship

14 June 2015
Team Matches Points Rating
South Africa 21 2738 130
Australia 26 2894 111
New Zealand 29 2875 99
India 23 2242 97
England 30 2920 97
Pakistan 20 1935 97
Sri Lanka 21 2019 96
West Indies 26 2101 81
Bangladesh 19 783 41
Zimbabwe 10 53 5

ICC ODI Championship

24 June 2015
Team Matches Points Rating
Australia 38 4899 129
India 48 5500 115
New Zealand 42 4710 112
South Africa 46 5131 112
Sri Lanka 55 5811 106
England 47 4592 98
Bangladesh 31 2868 93
West Indies 35 3094 88
Pakistan 45 3915 87
Ireland 11 549 50
Zimbabwe 30 1319 44
Afghanistan 15 618 41

ICC Twenty20 Championship

23 June 2015
Team Matches Points Rating
Sri Lanka 25 1760 125
India 18 1244 124
Australia 28 1953 122
West Indies 29 1994 117
Pakistan 33 2277 114
South Africa 31 2084 110
New Zealand 26 1706 107
England 28 1653 103
Bangladesh 15 612 77
Scotland 10 426 71
Afghanistan 12 373 62
Netherlands 12 357 60
Ireland 9 340 57
Zimbabwe 12 334 48

ஆசிய தடகளத்தில் சாதித்தவர் வீடு இதுதான்... சத்துணவு சாப்பிட்டு தங்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய கிராண்ட் ஃபிரி தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் இலக்கினை 45.85 வினாடிகளில் அடைந்து திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம் ஏராளம்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டபந்தயம் ஆண்கள் பிரிவில் 16வருடங்களுக்கு இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமையை தேடி தந்தவரும் கூட. அந்த சமயத்தில் அவர் அளித்த உற்சாக பேட்டியுடன் கூடிய கட்டுரை  இங்கே....

ஏழ்மையான குடும்பம்


பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஆரோக்கிய ராஜீவ்வின் குடும்பம். சொந்தகிராமத்தில் குடியிருந்த குடிசை வீடும் இடிந்துபோக, வீடு கட்ட வசதியில்லாமல் பக்கத்து கிராமமான மணக்காலில் வாடகை வீடெடுத்து குடியிருக்கிறது. அந்த வீட்டின் சுவற்றில் ஆரோக்கிய ராஜீவ்வும், அவரது உடன்பிறப்புகளும் வாங்கிய பதக்கங்கள் ஆணியடித்து தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் அருகில் ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வாங்கிய ஆரோக்கிய ராஜீவ்வின் புகைப்படம் கலர் ஜெராக்ஸில் பளபளத்தது. இப்போது வாழ்த்துமாலைகளை சுமக்கும் ஆரோக்கிய ராஜீவ், இவற்றையெல்லாம் எளிதாக அடைந்துவிடவில்லை.
ஆரோக்கிய ராஜீவ்வின் அப்பா சௌந்தர்ராஜன் தனியார் கல்லூரி ஒன்றியில் டிரைவராக வேலை செய்தவர். தாய் லில்லி சந்திரா, பாசத்தை  மட்டுமே பிள்ளைகளுக்கு பரிமாறும் சராசரி தாய், தம்பி ரஞ்சித் நீளம் தாண்டும் வீரர், தங்கை எலிசபத் ராணி கைப்பந்து வீராங்கனையாக குடும்பமே விளையாட்டு வீரர்களால் நிறைந்தது.

விளையாட்டு வீரரான கதையை சொல்லுங்க என்றதும் சிரித்தபடி,''எங்கவீட்டுல நாங்க எல்லாம் பிளேயர்களானதற்கு  எங்கப்பா பண்ணுன டார்ச்சர்தான் காரணம் என அப்பாவை கைகாட்டியவர், உண்மைதாங்க. அப்பா ஒரு ஸ்போர்ட்ஸ் மேன், அவர் படிக்கும்போது மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கலந்துக்கிட்டு நாளைந்து சர்டிபிகட்டை வாங்கிட்டார். அதைகாட்டி காட்டியே, என்னைப்போல நீங்களும் விளையாட்டுல ஜெயிக்கனும்னு  அடிக்கடி டார்ச்சர் பண்ணுவார். அவரு பண்ணின டார்ச்சர பொறுக்காமத்தான், விளையாட ஆரமிச்சேன்.  என அப்பாவை பார்த்து சிரித்தபடி பேச துவங்கினார்.

கை தூக்கி விட்ட பயிற்சியாளர்

முதன்முதல்ல எங்க கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் ஓடி பரிசு வாங்கினேன். அதுதான் என் முதல்பரிசு. அடுத்து லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் சேர்ந்து படிச்சேன்.  நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் கலந்துகொண்டேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்னோட சீனியர்கள் விளையாடுவதை கவனிப்பேன். அதைபோல நானும் பிராக்டிஸ் பண்ணுவேன்.  போட்டிகள்ல கலந்துக்குவேன். ஆனால் நான் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தேன். இதுக்கும் அப்பா என்னை திட்டுவார். என்னுடைய ஆர்வத்தை பார்த்து எங்க கோச்சர் ராமச்சந்திரன், எனக்கு  பயிற்சி கொடுக்க ஆரமிச்சார். அவரை பார்க்கும்வரை எனக்கு ஷூ போட்டுக்கிட்டுதான் ஓடனும்னே தெரியாது.
பள்ளி கூட சத்துணவு பகிர்ந்தளித்த நண்பர்கள்

அவர்தான், ஒரு ஓட்டபந்தைய வீரனுக்கு உணவு ரொம்ப முக்கியம்னு அடிக்கடி சொல்லுவார். ஆனால் அவர் சொல்லுகிற உணவு எங்க வீட்டில் கிடைக்காது. அம்மா தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கி கொடுப்பாங்க. பள்ளிக்கூட நாட்களில் தினமும் சாயங்காலம் பிராக்டிஸ் இருக்கும். அதனால் மதியமே அதிகம் சாப்பிடுவேன்.
கொஞ்சம் நிறுத்தியவர், தினமும் மதியம்  பள்ளிக்கூடத்தில் போடும் சத்துணவு சாப்பாடுதான் எனக்கு சத்தான உணவு. அப்போ என்னோட நண்பர்களான,  நிர்மல் மத்தியானந்த், விஜயபாலன், மார்ஷல், கார்த்திக் இவங்களோடுதான்  மதியம் சாப்பிடுவேன். எனக்காக இவங்க எல்லோரும் கொஞ்சமாக சாப்பிட்டு, மச்சான் சாப்பிடுடான்னு எனக்கு கொடுத்திடுவாங்க. அந்தளவுக்கு அவனுங்க எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. அடுத்து பயிற்சி முடிச்சிட்டு சாயங்காலம் ஊரை சுற்றியிருந்த வாழை தோப்பு, கரும்பு தோட்டம்னு சுற்றி கிடைப்பதை சாப்பிடுவோம். அதுதான் எங்களுக்கு அடுத்த சத்தான  உணவு.

இந்நிலையில் என்னுடைய குடும்ப சூழலை புரிஞ்சிக்கிட்ட எங்க கோச் ராமச்சந்திரன் சார், அவருடை சொந்த காசுல சிறுதானிய உணவுகளை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுவார். 50 ரூபாய்ல மாதம் எந்தளவுக்கு எனர்ஜி ஃபுட் சாப்பிடலாம்னு அவர்தான் கத்துகொடுத்தார். அதுமட்டுமில்லைங்க போட்டிகளில் கலந்துகொள்ள ஷூவாங்க காசில்லாமல் கோச்சருடைய பழைய ஷூவை போட்டுக்கிட்டு ஓடியிருக்கிறோம்.  அப்படி வாங்கிய ஷூவை திருப்பி தராமல் தேய்ந்துபோனதும் உண்டு.

எங்களை தங்கள் குழந்தையைபோல பார்த்து பார்த்து வளர்த்தார்.  இப்படியிருக்க  எனக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம், படிப்பில் வரல. புத்தகத்தை திறந்தாலே தூக்கம் தூக்கமாக வரும். அந்தளவுக்கு எனக்கு படிப்புக்கும் ரொம்ப தூரம். 10வது படிக்கும்போதிலிருந்து அடுத்தடுத்த கலந்துகொண்ட போட்டிகளில் ஜெயிச்சேன். +2வில் ஜஸ்ட் பாஸ்தான். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ வரலாறு சேர்ந்தேன்.
பட்டை தீட்டிய ராணுவம்

அங்கு எனக்கு சீனியராக இருந்த குமார் அண்ணன்,  நீ விளையாட்டில் ஜெயிக்கனும்னா வீட்டிலிருந்து பிராக்டிஸ் பண்ணினால் ஜெயிக்க முடியாது. உனக்கு திறமையிருக்கு, ராணுவத்துல சேர்ந்துடு. அங்க உனக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னார். அவர் சொன்னபடி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நீளம் தாண்டுதல், டிரிபில் பிரிவில் ஹவில்தார் பணிக்கு விண்ணப்பித்தேன்.
ஊட்டியிலுள்ள  இந்திய ராணுவத்திற்கான மதாராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் சுபேதராக பணியாற்றும் ராம்குமார் சார், என்னை தேர்ந்தெடுத்தார். அங்கு சேர்ந்தபிறகுதான் இத்தனைநாள், நான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் ஒரு தடகள வீர்னின் உணவுக்கும்  உள்ள வித்தியாசத்தையே புரிஞ்சிக்கிட்டேன். அதிலிருந்து ராம்குமார் சார்தான் எனக்கு எல்லாம்.அவர்தான் என்னை, 400 மீட்டர். ஓட்டத்தின் மீது கவனம் செலுத்தினால் சூப்பரா வருவன்னு சொல்லி என்னை திசை திருப்பிவிட்டார். முதலில் நான் யோசித்தேன். பிறகு ஒத்துக்கொண்டேன். 2 வருசம் அங்கே பயிற்சி கொடுத்தாங்க. பிறகுதான் போட்டியில கலந்துகொள்ள அனுமதிச்சார்.

அடுத்த ஓரே வருசத்துல 400 மீ. ஓட்டத்தில் ஜெயிக்க ஆரம்பிச்சேன். முதலில் கடந்த 2012ல் சென்னையில் நடந்த தேசிய ஓபன் தடகளப் போட்டியில கலந்துக்கிட்டு தங்கம் வென்றேன். அடுத்து 2013ல் தாய்லாந்து மற்றும் இலங்கையில் நடந்த ஆகிய கிராண்ட்ப்ரீ போட்டிகள்ல இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம்  ஜெயிச்சேன். இப்படி அடுத்தடுத்து ஜெயிக்கவே என்னை  ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டியூட்டிற்கு என்னை மாற்றினார்கள். அங்கு கோச்சாக வந்தவர் முகமது குன்னு, என்னோட அடுத்தடுத்த பதக்க வெற்றிக்கு எனக்கு கிடைத்த பயிற்சியாளர்கள்தான் காரணம்.

ஆசிய போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கனும்னு பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்த நிலையில் காமன்வெல்த் போட்டி வந்தது. என்னோட போறாதகாலம் அதில் நான் சரியாக பெர்பார்ம் பண்ணல. இந்நிலையில் ஆசிய போட்டிக்கான இந்தியாவின் மெயின் டீம் செலக்ஸன் நடந்தது. அதில் நான் உட்பட 6 பேர் அதில் கலந்து கொள்ளனும். ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய காலில் தசை பிடிப்பு இருந்ததால் என்னால் ஓடமுடியல. ஏற்கனவே தனிநபர் சுற்றில் நாங்கள் செலக்ட் ஆகியிருந்தாலும், ஆனாலும் எங்கள்  டீம் வீரர்கள் சரியாக ஓடாததால இந்தியா மெயின் டீம் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தது.
ஒலிம்பிக்தான் ஒரே லட்சியம்

அடுத்தும் எனக்கு சோதனை காத்திருந்தது, ஆசிய விளையாட்டுபோட்டியில் கலந்துகொள்ள நான் தயாரானபோது என் வலதுகால் பின்னந்தொடையில் பயங்கரவலி இருந்தது. பரிசோதித்த மருத்துவர்கள் தொடையில் தசை விளகியிருப்பதாக சொன்னாங்க, போட்டியில் கலந்துகொள்ள முடியுமா? என்கிற நிலையில். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது என்னுடைய பயிற்சியாளர்களான ராம்குமார்சார், முகமது குன்னு எல்லாம் நீண்ட முயற்சிக்கு பிறகு என்னை தேற்றினார்கள்.

தற்போது ஆசிய கிராண்ட் பிரியில் தங்கம் வெல்ல அந்த சோதனைகள் தான் காரணம். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதுதான் எனக்கு லட்சியம். அதற்கான அடுத்தகட்ட முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்து நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றவர்  இறுதியாக  இடிந்துபோன எங்க வீட்டை இடிச்சிட்டு, அதில் சொந்த வீடு கட்டி அம்மா அப்பாவை அதில் குடியேற வைக்கனும் இந்த இரண்டு கனவும் நிச்சயம் நிறைவேரும் என்கிறார்.

கடந்த மாதம்தான் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜுவின் குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. அவ்வளவாக பேருந்துவசதியில்லாத கிராமத்தில், படுத்து எழ நிரந்தரவீடில்லாமல் ஏழ்மையில் வளர்ந்த ஆரோக்கியராஜு தூக்கிபிடித்த தேசியக்கொடியில் மிளிர்கிறது இந்தியா.

ஏழ்மையில் சாதித்த அவரை நாமும் வாழ்த்துவோம்!

Wednesday, 24 June 2015

Programs

Types of programmers

Different programmers follow different rules. They have different preferences when it comes to coding, conventions and tools. We have put together some of the common differences in the form of images. View, share and enjoy!







The problem of choice







The n00b vs the experienced







Night and Day







The quick keyboard vs the easy mouse







The vim wizard vs the gedit fan







The coder vs the explainer

Friday, 19 June 2015

நேற்று சரத்... இன்று விஷால்... கலகலக்கும் நடிகர் சங்க விவகாரம்!

மதுரைக்கு  நேற்று வருகை தந்து ஆதீனத்திடம் ஆசி பெற்று, மதுரை நாடக நடிகர் சங்கத்தில் ஆதரவு திரட்டி, செய்தியாளர்களிடம் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கொடுத்த நடிகர் சரத்குமாருக்கு கவுன்டர் கொடுக்கும் விதமாக, இன்று காலை விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மதுரை வந்தனர்.
 
பாண்டியன் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சங்க விவகாரம், வருகின்ற நடிகர் சங்க தேர்தல் சம்பந்தமாக தங்களுடைய நிலைப்பாடு என்னவென்பதை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தெளிவுபடுத்தியவர்கள், அதைத்தொடர்ந்து மதுரை சுண்ணாம்புக்காரத்தெருவில் அமைந்திருக்கும் மதுரை நாடக நடிகர் சங்கத்துக்கு வருகை தந்தனர்.
இவர்களை வரவேற்க நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் காத்திருந்தார்கள். பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

இவர்களை வரவேற்ற சங்கத்தலைவர் மோகன், "இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் நடிகர் சங்கம் மதுரை சங்கம்தான். இங்கிருந்துதான் பல பிரபல சினிமா நடிகர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட எங்களை நடிகர் சங்கத்தில் சேர்க்க கூடாதென்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்க வேண்டும். எங்களுக்கு எல்லா நடிகர்களும் ஒன்றுதான். நாடக நடிகர்கள் நல்லபடியாக வாழும் வகையில் நடிகர் சங்கத்தினர் நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்றார்.
நடிகர் கருணாஸ் பேசும்போது, "இதே மதுரையில் இருபது வருடங்களுக்கு முன்பு இசை கச்சேரி மேடைகளில் மிமிக்ரி செய்தும், பாடல் பாடியும் திரிந்தவன் நான். அதன் பின் நாடக அமைப்பாளர்களுக்கு டீ, வெற்றிலை பாக்கு வாங்கி கொடுத்து, நாடகங்களில் சின்ன கேரக்டரில் நடித்தவன். அந்த பயிற்சிதான் இன்று என்னை சினிமா நடிகனாக மாற்றியது. நான் உங்கள் வீட்டு பிள்ளை.
இங்கு ஒரு நாடக நடிகர் காலமானபோது ஈமச்சடங்கு செய்ய பணமில்லாமல் நோட்டு போட்டு காசு வசூலித்த கொடுமையை அப்போதைய நடிகர் டி.ஆர். மகாலிங்கம் கேள்விப்பட்டு மனம் துடித்தார். நாடக நடிகரோ, சினிமா நடிகரோ நமக்கென்று எதிர்காலத்துக்காக ஒரு அமைப்பு வேண்டுமென்றுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கினார். அப்படி நல்லது செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் நடிகர் சங்கம். தற்போது அந்த சங்க நிர்வாகிகளுக்கும், உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது. உங்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு வகையில் பிரிந்து கிடந்த நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். நடிகர் சங்கத்தை வைத்து நாங்கள் ஆதாயம் அடையப் போவதில்லை. இனி அதில் உங்கள் நலனுக்காக இயங்க வேண்டுமென்றுதான் உங்களை தேடி வந்திருக்கிறோம்" என்றார்.
நாசர் பேசும்போது, "நான் செங்கல்பட்டில் பிறந்தவன். எங்கள் பகுதியில் நாடகத்தை விட தெருக்கூத்துகள்தான் அதிகம். அதைபார்த்து நடிப்பை கற்றவன் நான். இன்றுவரை தெருக் கூத்தையும், நாடகத்தையும் மதிப்பவன் நான். நாங்கள் சினிமாவில் நடிப்பது சும்மா, உங்களைப்போல் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட நீங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கிறீர்கள். உங்கள் தன்மானம் காக்கப்பட வேண்டும். எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தமில்லாத நாங்கள் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறோம்" என்றார்.

விஷால் பேசும்போது, "நாங்கள் பதவி சுகத்தை அடைய வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டுமென்று கேட்டு வரவில்லை. போதிய வருமானமில்லாமல் இருக்கும் உங்களை நல்ல நிலைக்கு கொண்டுவரவே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் நாங்கள் எப்போதும் உங்களுக்காக இருப்போம். நீங்கள் வாங்கி போட்டிருக்கும் நிலத்தில் பெரிய அளவில் நாடக நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவுவோம்" என்றார்.

என் அப்பா சிவகுமார் என்பதில் பெருமிதம்- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர்சிவகுமார் திரையுலகுக்கு வந்து இன்றோடு ஐம்பதுஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1965 ஆம் ஆண்டு ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்த காக்கும்கரங்கள் படம்தான் சிவகுமாரின் முதல்படம்.


அந்தப்படம் 1965 ஜூன் மாதம் இதேநாளில் வெளியானதாம். இதையொட்டி, தன்னுடைய அப்பாவுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் சூர்யா.

மைடியர் அப்பா, திரையுலகில் ஐம்பது ஆண்டுகள் நிறைவுசெய்திருக்கிறீர்கள், இந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ பாடங்கள், அனுபவங்களைக் கொண்டிருக்கிறீர்கள்.  நானும் கார்த்தியும் நடிப்பிலும் மனிதநேயத்திலும்  உங்களையே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம், என் அப்பா சிவகுமார் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என்று வாழ்த்துச்சொல்லியிருக்கிறார்.

Wednesday, 17 June 2015

2 வயதில் திருமணம்..13 வயதில் விதவை: நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்

ராஜஸ்தானில் சிறுமி ஒருவருக்கு 2 வயதில் திருமணம் செய்து       வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.
இந்நிலையில், அங்குள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12ம் திகதி பேருந்து உயரழுத்த மின்கம்பி விழுந்த கோர விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
அந்த விபத்தில் சோஹானி தேவியின் 15 வயது கணவன் சுக்கிராம் குஜ்ஜாரும் உயிரிழந்துள்ளார்.
அந்த சிறுமிக்கு 2 வயதாக இருந்த போது சுக்கிராமை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது சோஹானி தேவிக்கு 13 வயது ஆகிறது.
படிக்கவேண்டிய வயதில் அந்த சிறுமி விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமனார் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுமி தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருந்துள்ளார்.
இதுபற்றி குழந்தைகள் நல ஆர்வலரான ரவி சர்மா கூறுகையில், சோஹானி விவகாரம் மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால் இம்மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட பெண் குழந்தைகள், பால்ய விவாகங்களில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், அரசு இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, 16 June 2015

மகன் சார்லஸ், மகள் துவாரகா பற்றி புலிகளின் தலைவர்

http://www.asrilanka.com/wp-content/uploads/2015/05/TUVARKA.jpg
முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும். - See more at: http://www.asrilanka.com/2015/06/13/29027#sthash.cAKipWcO.dpuf
2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டபோது
அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார்.
தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் அன்டனி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.
வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.
துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என ஆன்றோர் கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.
அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது.
முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.
மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள். கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார்.
ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.
அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார்.
தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் மிக்க தலைவனை உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல், திமிருடன் பெருமிதம் கொள். TUVARKA
- See more at: http://www.asrilanka.com/2015/06/13/29027#sthash.cAKipWcO.dpuf





2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டபோது
அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார்.
தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் அன்டனி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.
வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.
துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என ஆன்றோர் கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.
அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது.
முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.
மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள். கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார்.
ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.
அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார்.
தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் மிக்க தலைவனை உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல், திமிருடன் பெருமிதம் கொள்.
- See more at: http://www.asrilanka.com/2015/06/13/29027#sthash.ZCcNUgYN.dpuf

முதலை மீது பயணம் செய்த ரக்கூன், சமூக வலைதளங்களில் லைக்-கை வாங்கி குவிக்கிறது

புளோரியா,

அமெரிக்காவின் புளோரியாவில் முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்தபோது சுற்றுலாவிற்கு சென்றவர் எடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்துக் கொள்ளப்பட்டு வருகிறது. புகைப்படம் மற்றும் ரக்கூன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.


மத்திய புளோரியாவில் வனப்பகுதியில் ரிச்சார்டு ஜோனஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீரில் சென்ற முதலையின் மீது ரக்கூன் சென்றதை பார்த்து அதிர்ச்சியாக பார்த்து உள்ளார். பின்னர் அந்த காட்சியை புகைப்படம் எடுத்து உள்ளார். மிகவும் அரிதான அக்காட்சியை ஜோனஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார். கடந்த ஞாயிறு அன்று புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து இதுதொடர்பான செய்திகள் வெளியாகியே வருகிறது. அனைத்து உலக செய்தி இணையதளங்களும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.

முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்-களை வாங்கி குவித்து உள்ளது. பார்க்கும் அனைவரும் பகிர்ந்தும் வருகின்றனர்.  கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்தே புகைப்படமானது சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இதுதொடர்பாக ரிச்சார்டு அப்பகுதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் குதித்துவிட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.” என்று கூறிஉள்ளார். 

ஜட்டிக்குள் 'டிஷ்யூ' பேப்பரை திணித்து வைத்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆடிய சச்சின்!

டெல்லி: 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது ஜட்டியில் டிஷ்யூ பேப்பரை திணித்து வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடினாராம் சச்சின் டெண்டுல்கர். வயிற்றுப் போக்கையும் சமாளித்துக் கொண்டு, மகா பொறுமையாக, ஆடி அந்தப் போட்டியில் 97 ரன்களை எடுத்தார் சச்சின் என்பது சுவையானது... அதாவது அவரது பேட்டிங்...! ADVERTISEMENT தனது மலரும் நினைவுகளையும், கடந்த கால சம்பவங்களையும் தனது வாழ்க்கை வரலாற்று நூலான பிளேயிங் இட் மை வே என்ற பெயரில் வெளியிட்டுள்ளார் சச்சின். அதில் அவர் ஒரு நறுமணம் கமழும் சம்பவம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அலகாபாத் அருகே இந்திய விமானப்படை விமானம் விபத்து: விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

லக்னோ: அலகாபாத் அருகே இந்திய விமானப்படை போர்விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ADVERTISEMENT இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக போர் விமானம் இன்று காலை 7.25 மணிக்கு வழக்கமான பயிற்சி பணியில் ஈடுபட்டது. காலை 8.47 மணிக்கு விமானம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகர் அருகே செல்கையில் விபத்துக்குள்ளானது.

Indian Air Force's Jaguar fighter aircraft crashes near Allahabad
விமானம் தரையில் விழப்போவதை உணர்ந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் எதனால் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது என்பது உடனே தெரியவில்லை.
Indian Air Force's Jaguar fighter aircraft crashes near Allahabad
இந்த ஆண்டில் விபத்துக்குள்ளான இரண்டாவது ஜாக்குவார் போர் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா அருகே ஜாக்குவார் போர்விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விமானப்படை விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.